"காங். பிரிவினைவாத அரசியலுக்காக இட ஒதுக்கீடு வழங்கியது"- அமித்ஷா விமர்சனம்
கர்நாடகா அரசு இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 4 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து, அவர்களை பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவில் சேர்த்துள்ளது. இந்தநிலையில் கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிறுபான்மையினருக்கு அரசியலமைப்பு சட்டப்படி இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை என கூறியுள்ளார். மதத்தின் அடிப்படையில் இட ஓதுக்கீடு வழங்க அரசியல் சட்டத்தில் இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் பிரிவினைவாத அரசியலுக்காக சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கியதாக விமர்சித்த அமித்ஷா, பாஜக அந்த இட ஒதுக்கீட்டை ரத்து செய்து ஒக்கலிகர், லிங்காயத் சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்