தி.மலையில் கார்த்திகை மகா தீபம் நிறைவு: மீண்டும் கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்ட தீப கொப்பரை

Update: 2022-12-18 03:59 GMT

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு, மலையின் மீது ஏற்றப்பட்ட மகா தீப கொப்பரை, கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம், அண்ணாமலையார் கோயிலில் கடந்த மாதம் 27-ஆம் தேதி கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதைத் தொடர்ந்து, கடந்த 6-ஆம் தேதி, மலையின் மீது மகா தீபம் ஏற்றப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக 11 நாள்கள் தீபம் ஏற்றப்பட்டு, மகாதீப காட்சி நிறைவடைந்தது.

இதையடுத்து, மகாதீப கொப்பரை அண்னாமலையார் கோயிலுக்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்