திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே சுடிதாரை அயர்ன் செய்வதற்காக அயர்ன் பாக்ஸை எடுத்த கல்லூரி மாணவி மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேடசந்தூர் அருகே பில்லம்மநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகளான ஸ்வேதா, திண்டுக்கல்லில் உள்ள மகளிர் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர், சம்பவத்தன்று சுடிதாரை அயர்ன் செய்வதற்காக, குளித்து விட்டு ஈரக்கையால் அயர்ன் பாக்ஸை எடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது, மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட மாணவியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.