கோவை மெட்ரோ ரயில் திட்டம்... 39 கி.மீ தூரம்.. 32 ஸ்டேஷன்கள் - வெளியான அப்டேட்..!

Update: 2023-07-02 02:33 GMT

கோவையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூடுதல் தலைமை செயலாளர் ரமேஷ் சந்த் மீனா, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக் ஆகியோர் தலைமையில் கூட்டத்தில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் சித்திக், கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான அறிக்கை தயாரிப்பு பணிகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது என்றும், ஜூலை15-ஆம் தேதி, தமிழக அரசிடம் திட்ட அறிக்கை சமர்பிக்கப்படும் என்றும் கூறினார்.

முதல்கட்டமாக அவிநாசி சாலை, சத்தி சாலை ஆகிய இரு வழித்தடங்களில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்