கோவை டிஐஜி தற்கொலை - காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசனை
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து, முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் சமீபத்தில் டிஜிபி சைலேந்திரபாபு ஓய்வு பெற்ற நிலையில், காவல்துறையில் பல பொறுப்புகளில் அதிகாரிகள் மாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் தலைமைச்செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசனை நடத்தப்படவுள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில், கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதில் தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, உள்துறை செயலர் அமுதா, டிஜிபி சங்கர் ஜிவால், கூடுதல் டிஜிபி அருண், உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் மற்றும் மாநகர காவல் ஆணையர்கள், சரக ஐஜிக்கள், டிஐஜிக்கள், மாவட்ட எஸ்பிக்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.