சுற்று பயணம் செல்லும் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. எங்கெங்கு செல்கிறார்? - முழு விவரம்

3 மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் செல்லும் முதல்வர்.. எங்கெங்கு செல்கிறார்? - முழு விவரம்

Update: 2022-11-28 01:44 GMT

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பல்வேறு நலத்திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.இதற்காக காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அங்கிருந்து கார் மூலம் புறப்படும் முதலமைச்சர், திருச்சி காட்டூரில் உள்ள ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், சக்கரங்களில் அறிவியல் என்ற நிகழ்ச்சியினை தொடங்கி வைக்கிறார்.தொடர்ந்து மதியம் பெரம்பலூர் செல்லும் அவர்,எறையூரில் சிப்காட் தொழில் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி, பணி களை தொடங்கி வைக்கிறார்.பின்னர் மாலை 4 மணியளவில் அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழ புரத்தில் உள்ள மாளிகை மேட்டுக்கு சென்று, அங்கு நடைபெற்று வரும் அகழ் வாராய்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார்.பின்னர் இரவு அரியலூர் விருந்தினர் மாளி கையில் தங்கும் முதலமைச்சர் ஸ்டாலின், நாளை, கொல்லாபுரத்தில் பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களுக்கு சேர்த்து நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். அங்கு அரியலூர் மாவட்டத்தில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள 3 புதிய திட்டப்பணி களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். 51 முடிவுற்ற திட்டப் பணி களை திறந்து வைக்கும் முதலமைச்சர், 27 ஆயிரத்து 70 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். அதேபோல் பெரம்பலூர் மாவட்டத்தில் 31கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 54 பணிகளுக்கு அடிக்கல் நாட்டிகிறார். 221 கோடியே 80 லட்சத்து 28 ஆயிரம் மதிப்பிலான, 23 முடிவுற்ற திட்ட பணிகளையும், பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்து, 9621 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்