தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டு - வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு நிதியுதவி வழங்க கோரிக்கை

Update: 2022-12-10 14:50 GMT

மாண்டஸ் புயலால் வாழ்வாதரம் இழந்த மக்களுக்கு நிதியுதவி வழங்க வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், புயலை எதிர்கொள்ள தமிழக அரசு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்ததாகவும், மின் இணைப்பும் அதிகமாக துண்டிக்கப்படவில்லை எனவும், அதற்காக அரசை பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்