இந்திய மொழிகளில் நீதிமன்ற தீர்ப்புகள் - உச்ச நீதிமன்ற ஆலோசனை.. வரவேற்று ட்வீட் போட்ட முதல்வர்
இந்திய மொழிகளில் நீதிமன்ற தீர்ப்புகள் - உச்ச நீதிமன்ற ஆலோசனை.. வரவேற்று ட்வீட் போட்ட முதல்வர்
அனைத்து இந்திய மொழிகளிலும், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையை, முழு மனதுடன் வரவேற்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், தலைமை நீதிபதியின் ஆலோசனை, உயர் நீதிமன்றங்களில் மாநில அலுவல் மொழிகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்ற நீண்டகாலக் கோரிக்கையோடு, நமது நாட்டின் சாமானிய மக்களுக்கும், தீர்ப்பு தொடர்பான புரிதலை ஏற்படுத்தும் என குறிப்பிட்டுள்ளார்.