காங்கிரஸ் நிர்வாகிகள் இடையே மோதல் -ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதால் பரபரப்பு

Update: 2023-01-19 22:07 GMT

தமிழக ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தி ராணிப்பேட்டை நகர காங்கிரஸ் கட்சி சார்பில் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மனித உரிமைகள் அணியை சேர்ந்த நிர்வாகி ஜானகி ராமன், மதுபோதையில் திடீரென நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


மாவட்ட தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது இரு தரப்பினருக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டதில், ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.


மேலும் ஜானகிராமனை நிர்வாகிகள் தரதரவென இழுத்து சாலையின் நடுவே தள்ளிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்