கடலூரில் பாரம்பரிய நெற்பயிர்கள் குறித்து விவசாயி ஒருவர் ஏற்படுத்தியுள்ள விழிப்புணர்வு பலரது பாராட்டுக்களை குவித்து வருகிறது.
காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள மழவராயநல்லூரை சேர்ந்த விவசாயி செல்வன், ஆண்டுதோறும் பாரம்பரிய நெற்பயிர்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அந்த வரிசையில் இந்த ஆண்டு, தனது வயலில் சேர சோழ பாண்டிய கொடிகளையும், தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிப்புதூர் நகரத்தில் அமைந்துள்ள ஆண்டாள் கோயில் கோபுரத்தையும் அமைத்து பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.
தற்போது விவசாயி செல்வம் தனது வயலில் மாப்பிள்ளை சம்பா, கருப்புக் கவுனி, சீரக சம்பா உள்ளிட்ட பதினைந்துக்கும் அதிகமான பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டு வருகிறார்.