அய்யோ மீண்டும் மீண்டுமா?.. இந்த டைம் கார் சைஸில் மர்மம்.. கதிகலங்கிய அமெரிக்கா, கனடா
- அமெரிக்க வான் பரப்பில் மீண்டும் ஒரு மர்ம பொருள் பறந்ததாகவும், அதனை சுட்டு வீழ்த்தியதாகவும் ராணுவ தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது.
- அலாஸ்கா வான் பரப்பில் 40 ஆயிரம் அடி உயரத்தில் அந்த பொருள் பறந்ததாகவும், கார் அளவுக்கு பெரியதாக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
- 45 ஆயிரம் அடி உயரத்தில் விமானங்கள் பறக்கும் என்பதால், விமானங்களின் பாதுகாப்பு கருதி எஃப் 22 ரக போர் விமானம் மூலம் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மர்ம பொருள் குறித்த வேறு தகவல்கள் வெளியிடவில்லை.
- அதே நேரத்தில் தென் கரோலினா கடற்பகுதியில் சீன பலூனை தாக்க பயன்படுத்தப்பட்ட ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.