"வாக்குறுதியை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்" - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்
நியாய விலைக் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படும் என்கிற வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். நடப்பு பருவத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் உச்ச வரம்பை 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சரின் கடிதத்தை விமர்சித்துள்ள அண்ணாமலை, டிவிட்டர் பதிவில், கொப்பரைத் தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்யும் என்னும் தேர்தல் வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.