தமிழ்நாட்டில் 3 மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகும் சூழலில், தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு குறைகளை நிவர்த்தி செய்து, அங்கீகாரம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் மருத்துவர்கள் பதவி உயர்வுக்கான கலந்தாய்வை நடத்தாததால், 450 பேராசிரியர்கள், 550 உதவி பேராசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறினார். அதனால்தான் பயோ-மெட்ரிக் வருகை பதிவேட்டை முறையாக கையாள முடியாமல், 3 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அங்கீகாரம் ரத்தாகும் சூழல் உருவாகி உள்ளது என்றும் அவர் கூறினார்.