கேரள முதல்வர் பினராயி விஜயன் 12 நாட்கள் வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு, கடந்த 20ஆம் தேதி கேரளா திரும்பினார். இந்நிலையில் அவருக்கு காய்ச்சல் மற்றும் உடல் உபாதை ஏற்பட்டுள்ளதால், மருத்துவரின் அறிவுரைப்படி ஓய்வில் உள்ளார். இதையடுத்து கேரள முதல்வர் பினராயி விஜயன் வரும் 27ஆம் தேதி வரை பங்கேற்கவிருந்த, அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.