கடந்த மாதம் ஓபிஎஸ்க்கு ஒரு கடிதம் வந்தது..."- "அதை எடுத்துக்கொண்டு நீதிமன்றம் போறோம்" - வைத்தியலிங்கம் பேச்சு
- தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்.
- பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.
- நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை, நாளை தாக்கல் செய்கிறார். கூட்டத்தொடரில் ஆன்லைன் ரம்மிக்கான தடை மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது.
- இதுதவிர மாதந்தோறும் குடும்பத் தலைவிகளுக்கான உரிமைத்தொகை, திட்டத்துக்கான நிதி, பயனாளிகள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம்பெற உள்ளது.
- இதையடுத்து மானியக் கோரிக்கைகள் தொடர்பான அலுவல்கள் நடக்கும் தேதி பற்றி சபாநாயகர் அப்பாவு அறிக்கை வெளியிடுவார்
- . நீட் தேர்வு, பேனா சின்னம், தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள், பட்ஜெட் கூட்டத்தொடரில் முக்கியத்துவம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.