யார் பெருசு.. அடிச்சி காட்டும் சென்னை VS மதுரை புள்ளிங்கோ - பெரும் பரபரப்பு.. பதற்றம்

Update: 2023-06-11 06:28 GMT

மதுரை பெரியதா... சென்னை பெரியதா... என கலவரத்தை தூண்டும் வகையில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் புள்ளிங்கோக்கள் மோதிக் கொள்வது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து விரிவாக பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

வாழ்க்கை கலர்புல்லாக இருக்கிறதோ... இல்லையோ... கலரிங் அடித்த மண்டை முடி... கலர் கோடிங்கால் மின்னும் சட்டை துணி என டியோ பைக்கில் தெளலத்தாக வலம் வருபவர்கள் தான் புள்ளிங்கோ இளைஞர்கள்....

நாங்க கும்பலாக சுத்துவோம்... ஐய்யோ அம்மானு கத்துவோம்.. என இவர்களின் பிரதான கொள்கையின் படி எந்நேரமும் கும்பலாக திரியும் புள்ளிங்கோக்கள், சில நேரம் இழுத்து கொண்டு வரும் உரண்டை சிக்கலை ஏற்படுத்தும்...

தற்போது, இந்த புள்ளிங்கோக்கள் இழுத்துக் கொண்டு வந்துள்ள உரண்டை, சென்னையிலும் மதுரையிலும் வன்முறையை தூண்டும் விதமாக அமைந்திருக்கிறது....

அதாவது, இடியாப்ப பரம்பரைக்கும் சார்பேட்டா பரம்பரைக்கும் இடையேயான மோதலை போல, சென்னை புள்ளிங்கோவும், மதுரை புள்ளிங்கோவும், சென்னை பெரியதா... மதுரை பெரியதா... என ரீல்ஸ் மூலம் மோதி வருகின்றனர்...

எங்க ஊரு மதுர.. நீ ஆயிடுவ சிதற.. உன் புள்ளைங்கல விடுவோம் கதற.. என ரைமிங்காக பேசி வன்முறையை தூண்டும் விதமாக மதுரை புள்ளிங்கோ இன்ஸ்டாவில் ரீல்ஸ் பதிவுட...

அதற்கு நாங்க வண்ணாரப்பேட்டை.. சென்னை தான் எங்க கோட்டை என பதிலுக்கு கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் சென்னை புள்ளிங்கோக்கள் ரீல்ஸ் பதிவிட்டு வருவது ஒருவகையான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது....

சில மாதங்களுக்கு முன்பாக கோவை நீதிமன்ற வளாகத்தில் முன்விரோதம் காரணமாக இளைஞர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்...

இந்த சம்பவத்துக்கு முன்பும், பின்பும் சம்மந்தப்பட்ட இளைஞர்கள் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலமாகவும், ஸ்டேட்டஸ் மூலமாகவும் வன்முறையை தூண்டும் விதமாக கையில் கத்தி, அரிவாளுடன் ரீல்ஸ் பதிவிட்டு மோதி வந்தது குறிப்பிடத்தக்கது...

இதையறிந்த சைபர் க்ரைம் போலீசார், அவ்வாறு வன்முறையை தூண்டும் விதமாகவும், கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும் சமூக வலைதளத்தில் ரீல்ஸ் பதிவிடுபவர்களை களையெடுத்து சிலரை கைது செய்தனர்....

இந்நிலையில், தற்போது சென்னை புள்ளிங்கோக்களும், மதுரை புள்ளிங்கோக்களும் இவ்வாறு மோதி வருவது சமூகத்தில் அசாதாரமான சூழலை உருவாக்கி அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதனால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டு காவல்துறை விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பல தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்