மழையின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்.. 2 நாட்கள் தமிழகத்திற்கு காத்திருக்கும் பேய் மழை

Update: 2022-11-18 03:41 GMT

தமிழகத்தில் வரும் 20, 21 ஆகிய தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி , காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது.  இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 20, 21 ஆகிய இரு தேதிகளில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்,  தஞ்சாவூர், காரைக்கால், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரை கடலில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் குறிப்பாக, அந்தமான், இலங்கை, அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்லக் கூடாது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்