சென்னை மெரினா கடற்கரையில் வெளிநாட்டு துப்பாக்கி கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
சென்னை நொச்சிக்குப்பம் பகுதியை சேர்ந்த மீனவர் சுரேஷ், அதிகாலையில் மெரினா கடற்கரையில் சிப்பிகள் எடுக்கும் பணியை மேற்கொண்டிருந்தார்.
அப்போது, கலங்கரை விளக்கம் கடற்கரையில் கிடந்த துப்பாக்கியை எடுத்த சுரேஷ், அதனை கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் ஒப்படைத்தார்.
மேலும், அந்த துப்பாக்கியில் "மேட் இன் ஜெர்மனி" என்று எழுதி இருந்த நிலையில், அதில் தோட்டாக்கள் ஏதும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனையடுத்து, அது வெளிநாட்டு துப்பாக்கிதான் என உறுதி செய்த போலீசார், கடலில் இருந்து தவறி விழுந்ததா?
அல்லது யாரேனும் வீசிச் சென்றார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.