'மக்களின் வீடாக மாறும் மெரினா... உறங்குவதற்காக குவியும் மக்கள் - இரவுக்குத் துணையாக நிலா வெளிச்சம், கடல் அலை ஓசையே தாலாட்டு

Update: 2023-02-24 12:08 GMT

சென்னையில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் பனியின் தாக்கத்தால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி வந்த சூழலில், சில நாட்களாக வெயிலின் தாக்கமானது அதிகரிக்க துவங்கியுள்ளது.

இதனால் சென்னை மக்கள் மெரினா கடற்கரையில் இரவில் உறங்குவதற்காக அதிகளவில் குவிந்து வருகின்றனர்.

கடலலை ஓசையே தாலாட்டாகக் கொண்டு, நிலா, கலங்கரை வெளிச்சத்தைத் துணையாகக் கொண்டு, கடற்கரை மணற்பரப்பை மெத்தை போல் நினைத்து நூற்றுக்கணக்கான மக்கள் கண்ணயர்கின்றனர்...

முன்பெல்லாம் பட்டினப்பாக்கம் சுற்றுவட்டாரத்தில் உள்ள மீனவ கிராம மக்கள் பலரும் கடற்கரையில் உறங்குவர்.

ஆனால் இந்த ஆண்டு வெயில் சற்று கூடுதலாக வாட்டுவதால் சாலை ஓரங்களில் வசிக்கும் வீடற்ற மக்களுக்கு கடற்கரையே வீடாகியுள்ளது..

மாடுகளும் சூடு தாங்காமல் கடற்கரையிலேயே படுத்துறங்கி வெப்பத்தைத் தணித்துக் கொள்கின்றன...

Tags:    

மேலும் செய்திகள்