சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதி பதவியேற்பு

Update: 2023-03-27 09:31 GMT
  • மாவட்ட நீதிபதியாக இருந்த பெரியசாமி வடமலை, சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவியேற்றார்.
  • மாவட்ட நீதிபதியாக இருந்த பெரியசாமி வடமலையை, சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமித்து குடியரசுத்தலைவர் கடந்த 23ஆம் தேதி உத்தரவிட்டார்.
  • இந்நிலையில், பெரியசாமி வடமலைக்கு, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
  • இதன்மூலம், சென்னை உயர்நீதிமன்ற மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 59-ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை 16ஆக குறைந்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்