சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் மிதமான மழை பெய்த நிலையில், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்
வட கிழக்கு பருவமழையின் தீவிரம் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வந்தது. இதனையடுத்து, சாலைகளில் ஆங்காங்கே மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்நிலையில், நள்ளிரவில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக கிண்டி, நங்கநல்லூர், கத்திபாரா, சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மிதமான மழை பெய்தது. இதனால், பணி முடிந்து தங்களது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பியவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.