கூழாங்கல் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு..நடுவில் சிக்கிய சென்னை குடும்பம் - அடுத்து நடந்த திக் திக் நிமிடங்கள்

Update: 2023-04-25 03:20 GMT

கோவை மாவட்டம் வால்பாறையில், கூழாங்கல் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கிக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

வால்பாறை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்ல, தமிழக கேரள எல்லைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்த‌து. இதனால், முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்கும் கூழாங்கல் ஆற்றில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு பாய்ந்தோடியது. அப்போது, அங்கு குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் கரைக்கு ஓடி தப்பித்தனர். அதே நேரத்தில், சென்னையை சேர்ந்த, ராமச்சந்திரன் - சுகன்யா தம்பதி மற்றும் உறவினர் பரசுராமன் ஆகியோர், ஆற்றின் நடுவில் உள்ள திட்டில் சிக்கிக் கொண்டனர். தப்பிக்க முடியாமல் தவித்த மூன்று பேரையும், தீயணைப்புத்துறையினர், கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர். கனமழை தொடர்ந்து பெய்யும் என்பதால், ஆற்றில் யாரும் இறங்காமல் இருப்பதை உறுதி செய்ய பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்