சென்னைக்குள் நுழைந்ததும் காத்திருந்த அதிர்ச்சி... மர்ம கும்பலால் அரங்கேறிய பயங்கரம்
சென்னை கொடுங்கையூரில், வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து 68 லட்சம் ரூபாய் கொள்ளையடித்த வழக்கில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திரா மாநிலம் சௌத் ரா குண்டூர் பகுதியில் நகைக்கடை நடத்தி வரும் விஸ்வநாதன் என்பவர், தங்க நகைகளை கொள்முதல் செய்ய, தனது கடை ஊழியர்கள் இருவரை, சென்னை சவுகார்பேட்டைடைக்கு அனுப்பி வைத்துள்ளார். சென்னை வந்த ஊழியர்கள் அலிகான் மற்றும் சுகானி ஆகிய இருவரையும், கொடுங்கையூர் அருகே, 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து, தங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் போல் காட்டிக் கொண்டு, அவர்களிடம் இருந்த 68 லட்சம் ரூபாய் பணத்தை பறித்துவிட்டு தப்பிச் சென்றது. இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், பணத்தை கொள்ளையடித்துச் சென்றது ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த பக்துலு வெங்கட நரசிம்மராவ் என தெரியவந்தது. இதனையடுத்து, அவரை போலீசார் கைது செய்த நிலையில், 7 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.