சாவிலும் இணைபிரியா 3 நண்பர்கள்.. கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்

திருப்போரூர் அருகே கோயில் குளத்தில் குளித்த 3 கல்லூரி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த‌து சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-11-29 06:31 GMT

செங்கல்பட்டு மாவட்டம் சாத்தாங்குப்பம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர்கள் விஜய், உதயகுமார் மற்றும் முகேஷ். கல்லூரி மாணவர்களான இவர்கள், திருப்போரூர் சிதம்பரசுவாமி மடம் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக, முகேஷும், உதயகுமாரும் நீரில் மூழ்கி த‌த்தளித்துள்ளனர். அவர்களை காப்பாற்ற முயன்ற விஜயும் நீரில் மூழ்கினார். இதைக் கண்டு அப்பகுதி மக்கள் காப்பாற்ற முயன்றும், 3 பேரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் நீண்ட நேரம் தேடி 3 உடல்களையும் மீட்டனர். இறந்தவர்களின் பெற்றோர் கதறி அழுத‌னர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்