மனைவியை துண்டு துண்டாக வெட்டி தண்ணீர் தொட்டியில் வைத்து பாதுகாத்த கணவன்
- சத்தீஸ்கரில், நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, மனைவியைக் கொன்று, உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, தண்ணீர் தொட்டியில் கணவன் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் பகுதியை சேர்ந்த பவன் தாக்கூர் என்ற நபர், தனது மனைவி சாஹு என்பவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
- இந்த நிலையில், மீண்டும் தகராறு ஏற்படவே, ஆத்திரத்தில் மனைவியைக் கொன்ற பவன் தாக்கூர், உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி, வீட்டின் மேல் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசியுள்ளார்.
- இதனிடையே, வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே, அண்டை வீட்டார் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவித்துள்ளனர்.
- அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் ஆய்வு செய்தபோது, தண்ணீர் தொட்டியில் உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டி மறைத்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.
- பின்னர் பவன் தாக்கூரை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.