தேர்தலில் வெற்றி பெற்றால்..சந்திரபாபு நாயுடு அதிரடி வாக்குறுதி

Update: 2023-05-29 05:44 GMT

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், ஆந்திர அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் கொண்டுவரப்படும் என சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, அம்மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையின் முதல் தொகுதியை வெளியிட்டார். அப்போது அவர் தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால், அரசு பேருந்துகளில் பெண்கள் மாவட்டங்களுக்குள் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்தார். 18 முதல் 59 வயது வரையிலான பெண்களுக்கு மாதந்தோறும் 1500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் எனவும் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்