மருத்துவ கட்-ஆப் மார்க் குறைய வாய்ப்பு | Ma Subramanian | Medical Student
நடப்பாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கட் ஆப் மதிப்பெண் குறையும் என கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள நிலையில், சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு வரும் 19ம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், கடந்தாண்டை காட்டிலும் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பிற்கான கட் ஆப் மதிப்பெண் குறைவாக இருக்கும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். நீட் தேர்வு வினாத்தாள் கடினமாக இருந்ததால், அனைத்துப் பிரிவு மாணவர்களுக்கு கட்-ஆப் மதிப்பெண் குறைய வாய்ப்பு இருப்பதாக நீட் தேர்வு பயிற்சியாளர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.