நேரடி மானியம் - ரூ.50 ஆயிரம் கோடியை மிச்சம் செய்த மத்திய அரசு

Update: 2023-04-26 11:21 GMT
  • நேரடி மானியத் திட்டம் மூலம், மத்திய அரசின் பல்வேறு உதவி திட்டங்கள், மானியதொகைகள் நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படுகிறது.
  • 53 மத்திய அமைச்சரகங்கள் மற்றும் துறைகளைச் சேர்ந்த 312 திட்டங்களுக்கு இது தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.
  • இதன் மூலம் 2020-21இல் 44 ஆயிரம் கோடி ரூபாயும், 2021-22இல் 50 ஆயிரம் கோடி ரூபாயும் மிச்சமாகியுள்ளதாக மத்திய அரசின் தரவுகள் கூறுகின்றன.
  • அதிகபட்சமாக பொது விநியோகத் திட்டத்தில், 33 ஆயிரத்து 600 கோடி ரூபாய் சேமிக்கப்பட்டுள்ளது.
  • 2013 முதல் 2021 வரை, நாடு முழுவதும் 4.2 கோடி போலி ரேசன் அட்டைகளை ரத்து செய்ததன் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.
  • உர மானியத்தில் 8 ஆயிரத்து 700 கோடி ரூபாயும், ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாயும் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்