கள்ளக்குறிச்சி மாணவி தாயார் தொடர்ந்த வழக்கு - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Update: 2023-04-21 15:14 GMT

கள்ளக்குறிச்சி மாணவி மரண விவகாரத்தில், பள்ளி நிர்வாகிகளுக்கு நிபந்தனை ஜாமின் அளிக்கப்பட்டதை எதிர்க்கும் மாணவியினுடைய தாயின் மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் கைதான பள்ளியின் தாளாளர், செயலாளர் உள்ளிட்டோருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இதனை எதிர்த்து மாணவியின் தாய் செல்வி தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நிபந்தனை ஜாமினை ரத்து செய்வதால் ஏற்படப் போகும் பயன் என்ன என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதனிடையே ஜாமீன் வழக்கு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை பாதிக்கும் வகையில் கருத்துக்களை தெரிவித்துள்ளதாக செல்வி சார்பில் முறையிடப்பட்டது. அதனை பதிவு செய்துகொண்ட உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்த கருத்துகள் தேவையற்றவை எனவும், அந்த கருத்துகளை விசாரணை நீதிமன்றம் கருத்தில் கொள்ளாமல் வழக்கை விசாரிக்க வேண்டும் என தெரிவித்து, செல்வியின் மனுவை தள்ளுபடி செய்தது.      

Tags:    

மேலும் செய்திகள்