அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான வழக்கு.. வீடியோவை ஆய்வு செய்ய உத்தரவு

Update: 2022-08-02 03:43 GMT

அரசு அதிகாரியை ஜாதி பெயரை சொல்லி திட்டியதாக தொடரப்பட்ட அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான வழக்கில், அரசு ஊழியர் அளித்த வீடியோ பதிவை தடயவியல் துறை ஆய்வுக்கு உட்படுத்த தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சென்னை சேப்பாக்கத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான பல்வேறு புகார்கள் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹால்டர் விசாரணை நடத்தினார்.அதில் முதுகுளத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரை ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீது தொடரப்பட்ட வழக்கு விசாரிக்கப்பட்டது. விசாரணையில் அமைச்சர் திட்டியதாக சமூக வலைதளங்களில் பரவிய வீடியோ ஆய்வு செய்யப்படாததை அறிந்த அருண் ஹால்டர், வீடியோ பதிவினை தடயவியல் துறைக்கு அனுப்பி ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என விசாரணையை சிவகங்கை காவல்துறைக்கு மாற்றி உத்தரவிட்டார். அதை தொடர்ந்து குறிஞ்சாங்குளம் படுகொலை வழக்கில், கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும், உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார். மேலும், ஊட்டியில் 50 குடும்பங்கள் மூன்று தலைமுறையாக பட்டா கொடுக்கவில்லை என்ற விசாரணையில் உடனடியாக பட்டா வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், மின்சார வசதியில்லா 7 குடும்பங்களுக்கு உடனடியாக மின்சாரம் வழங்கவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணை தலைவர் அருண் ஹால்டர் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்