மெரினா செல்லும் வழியில் விபத்தில் சிக்கிய கூட்டுறவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கார்

Update: 2022-12-26 04:13 GMT

சுனாமி நினைவு நாளையொட்டி கூட்டுறவுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அஞ்சலி செலுத்த வருகை தந்த நிலையில் எதிர்பாராத விதமாக அவரது கார் விபத்திற்கு உள்ளானது

விபத்து நடந்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவுக்குள் மெரினா காவல் நிலையம் இருந்தும் விபத்து பகுதிக்கு வருகை தராத காவல்துறையினர்

விபத்தின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் போக்குவரத்தை நெரிசலை தாமாகவே சரி செய்த செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன்....

இன்று சுனாமி நினைவு தினம் அனுசரிக்கப்படும் நிலையில் பட்டினப்பாக்கத்தில் மீனவ குடும்பத்தினருடன் அஞ்சலி செலுத்துவதற்காக உணவு மற்றும் கூட்டுறவுத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தமது இனோவா காரில் வருகை புரிந்தார்

பட்டினப்பாக்கம் இணைப்பு சாலை சந்திப்பில் வருகை தந்தபோது சென்னையில் இருந்து மேல்மருவத்தூர் நோக்கி செல்லும் டூரிஸ்ட் வாகனம் தவறுதலாக நேருக்கு நேர் மோதியதில் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் காரின் முன் பகுதி முழுவதுமாக சேதாரமானது.

டூரிஸ்ட் வாகனம் சாலையின் வளைவில் தவறாக ஒட்டியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக எந்த விதத்தில் காயங்களும் இன்றி தப்பிய கூட்டுறவு துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தாமாகவே சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்ததுடன் தொடர்ந்து சுனாமி தினத்தை ஒட்டி பட்டினப்பாக்கத்தில் அஞ்சலி செலுத்தினார்.

விபத்து நடந்த பகுதியில் இருந்து 200 மீட்டருக்குள் மெரினா காவல் நிலையம் இருந்தும் விபத்து குறித்தோ அல்லது போக்குவரத்து நெரிசலை சரி செய்யவோ எந்த ஒரு காவல்துறையினரும் இதுவரை வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்