கேன்சரை போராடி வென்ற நடிகையை தாக்கிய வினோத நிறமிழப்பு நோய் - 'சிவப்பதிகாரம்' நடிகைக்கு வந்த சோதனை
கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவர், ஏராளமான மலையாள படங்களிலும் நடித்ததன் மூலம் அனைவராலும் அறியப்பட்ட ஒரு நடிகையாக உள்ளார்..
இதனிடையே கடந்த 2010ல் தனக்கு கேன்சர் இருப்பதாக அறிவித்தார் நடிகை மம்தா...
பல கட்ட சிகிச்சைகள் மற்றும் போராட்டங்களுக்கு மத்தியில் மீண்டு வந்தார் அவர்.. உடல்நிலை தேறிய பிறகு சினிமாவிலும் கவனம் செலுத்தி வந்தார் மம்தா...
மலையாளத்தில் ரியாலிட்டி ஷோக்களில் கவனம் செலுத்தி வந்த மம்தா, அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கேன்சர் மையத்தில் சென்று சிகிச்சை பெற்று வந்தார்...
இந்த சூழலில் அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தனக்கு விட்டிலிகோ எனும் ஆட்டோ இம்யூன் நோய் தொற்று இருப்பதாக கூறியுள்ளார்.
தன்னுடைய நிறத்தை இழந்து வருவதாகவும், உங்களின் ஆதரவால் மீண்டு வருவேன் என்றும் உருக்கமாக பதிவிட்டு இருக்கிறார்...
விட்டிலிகோ எனப்படும் இந்த ஆட்டோ இம்யூன் பாதிப்பு தோலின் நிறத்தை வெள்ளை நிறமாக்கி விடும்.. அப்படியே உடலெங்கும் பரவும் தன்மை கொண்டது..
மற்றவர்களுக்கு இது பரவாது என்றாலும், மெலனோசைட்ஸ் பாதிப்பால் ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலும் கூட, கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் உள்ளன.
ஏற்கனவே நடிகை சமந்தா மயோசிடிஸ் நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்கும் நிலையில் அவருக்கு அடுத்து நடிகை பூனம் கவுர் ஃபைப்ரோமியால்ஜியா எனும் அரிய வகை நோய் பாதிப்புக்கு ஆளாகினார்..
இப்போது நடிகை மம்தா மோகன்தாஸ் விட்டிலிகோ தொற்றுக்கு ஆளாகி இருக்கும் நிலையில் புற்று நோயை வென்றவர் இதிலும் மீள்வார் என ஊக்கம் தெரிவிக்கின்றனர் ரசிகர்கள்