நீச்சல் குளத்தில் விழுந்த 20 மாத குழந்தை.. இதயமே நின்ற 3 மணி நேரத்திற்கு பின் எழுந்துஉட்கார்ந்த அதிசயம்.. ஷாக்கான மருத்துவர்கள்

Update: 2023-02-24 08:11 GMT
  • விலை மதிப்பில்லா உயிரை காப்பாற்றும் மருத்துவர்களின் போராட்டங்களில், அவ்வப்போது நிகழும் அதிசயம் சில நேரங்களில் நம்மை வியப்பில் நெகிழச் செய்யும்... அப்படியொரு சம்பவம்தான் கனடாவிலிருந்து வெளியாகியிருக்கிறது.
  • பெட்ரோலியா நகரில், குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் விளையாடிய 20 மாத குழந்தை நீச்சல் குளத்தில் விழுந்திருக்கிறது. குழந்தை குளத்தில் விழுந்து 5 நிமிடங்கள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டுள்ளது.
  • பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த குழந்தையை தீயணைப்பு படையினர் அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
  • குழந்தையின் இதயத் துடிப்பு நின்றிருந்ததை அறிந்த மருத்துவர்கள் உடனடியாக, சுவாசத்தையும் இதயத் துடிப்பையும் மீட்கும் சிபிஆர் சிகிச்சையை தொடங்கியுள்ளனர்.
  • குழந்தைக்கு சுவாசம் கொடுக்க மருத்துவ பணியாளர்கள் போராட்டம் ஒரு பக்கம், குழந்தையை கதகதப்பாக வைத்திருக்க தண்ணீரை சூடாக்கி உதவிய செவிலியர்கள், குழந்தை என்பதால் நேர்த்தியாக, அதிக அழுத்தம் கொடுத்துவிடாத வகையில் சிபிஆர் வழங்கிய மருத்துவர்கள் பரபரப்பாகியிருக்கிறது மருத்துவமனை.
  • சுமார் 3 மணி நேரங்களுக்கு மேலாக மருத்துவ பணியாளர்கள் குழந்தைக்கு சிபிஆர் சிகிச்சையை வழங்க இறுதியில் குழந்தைக்கு இதய துடிப்பு மீண்டுள்ளது.
  • இந்த உணர்ச்சிமிகு நிகழ்வு அங்கிருந்தவர்களுக்கு மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் சிந்த செய்தது..
  • குழந்தை கால்களை ஆட்டி விளையாட தொடங்க நிம்மதி பெருமூச்சுவிட்ட மருத்துவர்கள், 10 நாட்கள் தொடர்ந்து கண்காணித்து பிப்ரவரி 6 ஆம் தேதி வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
  • குழந்தைக்கு இதயத்துடிப்பு திரும்பியது குறித்து பேசிய மருத்துவர் சர்மேஸ்கான், குறிப்பிட்ட மணி நேரத்திற்கு பின்னரும் இதயத் துடிப்பு மீள வாய்ப்புள்ளது என்றார். 
Tags:    

மேலும் செய்திகள்