தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு உள்ளதுபோல் புதுச்சேரியிலும் இடஒதுக்கீடு வழங்க கோரிக்கை வலுத்து வருகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உள்ஒதுக்கீடு குறித்த கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில், தற்போது உள்ஒதுக்கீடு வழங்க முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பரிந்துரைத்துள்ளார். இதுகுறித்து முடிவெடுக்க முதல்வர் ரங்கசாமி தலைமையில் வரும் 24-ம் தேதி மாலை 4 மணிக்கு அமைச்சரவை கூடுகிறது. இதைத்தொடர்ந்து, துணைநிலை ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டு, உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன், நடப்புக் கல்வி ஆண்டிலேயே 10 சதவீத உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என கூறப்படுகிறது.