பெண்களுக்கு மட்டும் தான் இலவச டிக்கெட்டா... எனக்கும் வேணும்..! - பேருந்தில் போதை ஆசாமி அட்டகாசம்
குமரியில் நேற்று இரவு நாகர்கோவிலில் இருந்து காட்டுப்புதூருக்கு அரசு பேருந்து ஒன்று சென்றுள்ளது... அப்போது மாங்குளம் அருகே பேருந்தில் ஏறிய போதை ஆசாமி ஒருவர், காட்டுப்புதூருக்கு டிக்கெட் கேட்டு பணம் தர முடியாது என அடம் பிடித்துள்ளார்... மேலும் பெண்களுக்கு மட்டும் தான் இலவச டிக்கெட்டா... எனக்கும் இலவசமாக டிக்கெட் வேண்டும் என நடத்துநரிடம் வம்பிழுத்துள்ளார்... அத்தோடு நில்லாமல் சன்டையிடுவது போல எகிறவே பேருந்து ஓட்டுநரும் நடத்திநரும் அச்சத்தில் அங்கிருந்து ஓடியுள்ளனர். தொடர்ந்து போதை ஆசாமி பேருந்தின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகளை கல் வீசி உடைத்துள்ளார்... அங்கு மட்டுமல்லாது அருகில் இருந்த மற்றொரு பேருந்து நடத்துநரான ஜனாரத்தனனிடமும் வம்பிழுத்து கட்டையால் அவரை தாக்கியதோடு அந்த பேருந்திலும் கண்ணாடியை உடைத்துள்ளார்... காயமடைந்த ஜனார்த்தனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், போலீசார் போதை ஆசாமியான காட்டுப்புதூரைச் சேர்ந்த சுபின் என்பவரை கைது செய்தனர்.