திண்டுக்கல் மாவட்டத்தில் 13 வயது பள்ளி மாணவனை, உடற்கல்வி ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளதாக மாணவனின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர். பழனி அருகேயுள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கிடையே பள்ளிப் பேருந்தில் இடம் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், மாணவர்கள் ஒருவரை தாக்கிக்கொண்ட நிலையில், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஏழாம் வகுப்பு மாணவனை தனியாய் அழைத்து சென்று கண்மூடித்தனமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், மாணவன் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மீது மாணவனின் பெற்றோர்கள் போலீசில் புகாரளித்துள்ளனர்