மீண்டும் ஏற்பட்ட உடைப்பு... பீறிட்டு வெளியேறிய கச்சா எண்ணெய் - அதிருப்தியில் மீனவர்கள்
நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்டிருந்த கச்சா எண்ணெய் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, பல லட்சம் லிட்டர் கச்சா எண்ணெய் கழிவுகள் கடலில் பரவி சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டது. இதனால் அப்பகுதி மீனவகிராம மக்களுக்கு கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பைப்லைன் செல்லும் பாதையை மணல் கொண்டு நிரப்பி ஓட்டையை அடைத்து சரி செய்ததாக சிபிசிஎல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் கடலுக்கு அடியில் மீண்டும் கசிவு ஏற்பட்டு குழாயில் இருந்து கச்சா எண்ணை பீறிட்டு வெளியேறியது. இதை கண்ட நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் சிபிசிஎல் நிறுவனம் மீது அதிருப்தியடைந்துள்ளனர்.