ஊசி போட மறுத்த சிறுவன்..புடிக்க சொன்ன கணவர்..வெடித்த தகராறு..

Update: 2023-05-12 12:57 GMT

அரியலூர் மாவட்டம் குமிழியம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் சத்யா என்பவர் மருத்துவராக பணியாற்றி வருகிறார். அதே கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தனது சகோதரியின் மகனை சிகிச்சைக்காக மருத்துவமனை அழைத்து வந்துள்ளார். அப்போது சிறுவன் ஊசிபோட அடம்பிடித்த நிலையில், அருகில் நின்றிருந்த மருத்துவர் சத்யாவின் கணவர் சிலம்பரசனை சற்று பிடித்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளார். கையில் குழந்தை இருந்ததால் அவர் மறுத்த நிலையில், சுரேஷ் அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், மருத்துவர் சத்யா மற்றும் அவரது கணவரை சுரேஷ் செருப்பை எடுத்து அடித்ததாக தெரிகிறது. இது தொடர்பாக மருத்துவர் சத்யா காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், சுரேஷ் கைது செய்யப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்