தந்தை பணம் கொடுக்க மறுத்தததால்... மாற்றுத்திறனாளி காதலியை கொன்ற காதலன்

Update: 2023-01-29 05:44 GMT

 கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காதலித்து வந்த மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி கொலை செய்த காதலனை போலீசார் கைது செய்தனர்.

வேப்பனப்பள்ளி அடுத்த நெரிகம் கிராமத்தை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளி பிரியங்கா.

இவர் ஓசூரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்த நிலையில், முதுகுறிக்கி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்ற இளைஞரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், திடீரென காதலில் தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் சமாதானம் பேச அழைத்த பெண்ணை ஸ்ரீதர் கடத்தியதாவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, பிரியங்காவின் தந்தையிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு காதலன் மிரட்டிய நிலையில், பெண்ணின் தந்தை போலீச்சில் புகாரளித்துள்ளார்.

இந்நிலையில், ராமன்தொட்டி அருகே உள்ள வனப்பகுதியில் பிரியங்கா கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்பட்ய்த்தியுள்ளது.

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பெண்ணின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில், காதலன் ஸ்ரீதரை போலீசார் கைது செய்த நிலையில், சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்