கேரளாவில் ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது குண்டுவீச்சு - சிசிடிவி மூலம் குற்றவாளிகளுக்கு வலைவீச்சு

Update: 2022-09-24 03:22 GMT

கேரளாவில் ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதற்கு எதிராக இந்தியா முழுவதும் இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டங்களில் ஈடுபட்டன. இந்நிலையில், கேரள மாநிலம், கண்ணூரில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகம் மீது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், வெடிகுண்டு வீசி விட்டு தப்பித்துச் சென்றுள்ளனர். அலுவலகத்தில் இருந்த இருக்கை, ஜன்னல் சேதமடைந்துள்ளன. சிசிடிவி காட்சி அடிப்படையில் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்