வெறுப்புணர்வை பரப்பியதாக யூடியூப், ஃபேஸ்புக் சேனல்கள் முடக்கம் - மத்திய அரசு அதிரடி
இந்தியாவில் இருந்து செயல்படும் 7 யூடியூப், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஒரு யூடியூப் என 8 யூடியூப் சேனல்களுக்கும் மொத்தமாக 86 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். மொத்தமாக 114 கோடி பார்வைகளை சேனல்களின் வீடியோக்கள் கொண்டுள்ளன. இவை, மத வழிபாட்டுத் தலங்களை இடிக்க இந்தியா உத்தரவிட்டுள்ளதாகவும், மத நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்துள்ளதாகவும், மதங்களுக்கு எதிராக போர் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், காஷ்மீரில் இந்திய ராணுவம் குறித்து தவறான தகவல்களையும் பரப்பியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் வெறுப்புணர்வை பரப்பி தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் இவை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ளது. இதே போன்று, ஃபேஸ்புக் சேனல் ஒன்றும் முடக்கப்பட்டுள்ளது.