பிரியாணியால் போலீசாருக்கு பிரச்சனை" - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. தகவல்

Update: 2022-09-18 15:06 GMT

பிரியாணி போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்வதால் காவலர்கள் மத்தியில் ரத்த அழுத்த பிரச்சினை அதிகரித்துள்ளதாக டி.ஜி.பி. ஜெயந்த் முரளி கவலை தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் விரைவில் உயர் ரத்த அழுத்தமானி வழங்க இருப்பதாக தமிழ்நாடு சிறுநீரக ஆராய்ச்சி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

சென்னையில் காவலர்களுக்கு சிறுநீரக பாதிப்பு வராமல் தடுப்பது குறித்த விழிப்புணர்வு தொடர் ஓட்டம் நடைபெற்றது. இதில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபி ஜெயந்த் முரளி கலந்து கொண்டு 50 கிலோ மீட்டர் மாரத்தான் ஓடி முடித்தார்.

இந்த விழிப்புணர்வு ஓட்டத்தின் மூலம் 15 லட்சம் ரூபாய் வசூல் செய்திருப்பதாகவும், அதன் மூலம் தமிழக காவல் நிலையங்களுக்கு உயர் ரத்த அழுத்தமானி வழங்க இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து, அதிக உடல் எடை, முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள் போன்றவற்றால்தான் காவலர்கள் மத்தியில் ரத்த அழுத்த பிரச்சினை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்