"தீவிர புயலாக வலுவிழந்தது 'பிபோர்ஜோய்'" - 6 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Update: 2023-06-13 04:47 GMT

அரபிக் கடலில் உருவான பிபோர்ஜோய் புயல், நாளை மறுநாள் குஜராத் மாநிலம் கட்ச் - பாகிஸ்தானின் கராச்சி இடையே கரையை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயலால் குஜராத் மாநிலத்தின் கரையோர பகுதிகள் பாதிக்கப்படும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், போர்பந்தரில் இருந்து தென்மேற்கே 310 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ள இந்த புயல், தற்போது தீவிர புயலாக வலுவிழந்துள்ளது. இதனிடையே, 6 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்