மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பைக் திருட்டு - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து இரு சக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

Update: 2022-11-09 17:20 GMT

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சி துறை அலுவலகத்தில் கணினி உதவியாளராக பணிபுரிந்து வருபவர் ரமேஷ் குமார். இவர் பணி முடிந்து வாகன நிறுத்தத்தில் இருந்த தனது வாகனத்தை எடுக்க வந்த போது, வாகனம் காணாததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே, இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அருகில் உள்ள சிசிடிவியை வைத்து நடத்திய விசாரணையில் அவரது பைக்கை அடையாளம் தெரியாத நபர்கள் எடுத்து செல்வது பதிவாகியிருந்தது. இந்த வீடியோவை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்