இந்தியாவில் வீட்டு வாடகை தொடர்ந்து அதிகரிக்கும் என, சொத்து ஆலோசனை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்...
அதிகரித்துவரும் கட்டுமான செலவுகள் மற்றும் வட்டி விகித உயர்வு போன்ற காரணங்களால், வீடு வாங்குவதைவிட, வாடகையில் குடியிருக்கவே பொதுமக்கள் விரும்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் வாடகை வீடுகளின் தேவை அதிகரித்துள்ளது. 2019ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2022ம் ஆண்டில், வீட்டு வாடகை சராசரியாக 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக, கொல்கத்தாவில் 16 சதவீதமும், பெங்களூருவில் 14 சதவீதமும் வீட்டு வாடகைகள் உயர்ந்துள்ள நிலையில், சென்னை, மும்பை நகரங்களில் வீட்டு வாடகை உயர்வு 13 சதவீதமாக இருந்துள்ளது. இந்நிலையில், நடப்பு ஆண்டிலும் வீட்டு வாடகை உயரும் என சொத்து ஆலோசனை நிபுணர்கள் கணித்துள்ளனர்.