'பக்தியோ பக்தி' - திருப்பதியால் காலி ஆன கிராமம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஒட்டுமொத்தமாக சென்ற ஊர்மக்களால் கிராமமே வெறிச்சோடி காணப்படுகிறது.
அகரம் கிராமத்தில் சுமார் 100 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை, திருப்பதிக்கு குடும்பத்துடன் சென்று வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஏழுமலையாணைக் காணச் செல்ல ஆண்டு தோறும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்து மஞ்சள் துணி கட்டிய உண்டியலில் சிறுக சிறுக பணம் சேர்த்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு புனித பயணம் மேற்கொண்டு வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டும் கிராம மக்கள் 4 பேருந்துகள் மூலம் திருப்பதிக்குப் புறப்பட்டுச் சென்ற நிலையில், கிராமமே வெறிச்சோடி காணப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
https://youtu.be/F0GQBP9nN4w