பகவதி அம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா - திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம்

Update: 2023-04-27 14:50 GMT

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மலையாள பகவதி அம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தாண்டு திருவிழா கடந்த 23ம் தேதி தொடங்கிய நிலையில் நாள்தோறும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வாக தேர் திருவிழா நடைபெற்றது. சுமார் 10 டன் எடையுள்ள மர தேரை பக்தர்கள் பாரம்பரிய முறைபடி, தலையிலும், தோளிலும் சுமந்து சென்றனர். நகரின் முக்கிய வீதிகளில் தேர் உலா வந்த நிலையில், திரளான பக்தர்கள் பக்தி முழக்கத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்