"இருப்பு கேட்குறாங்களே தவிர எடுத்துட்டு போகல" பள்ளிகளில் தூசி ஏறி குப்பையாக கிடக்கும் கொரோனா காலத்தில் வாங்கிய படுக்கைகள்
தமிழகத்தில் கொரோனா பரவத் தொடங்கியதும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளில் கொரோனா வார்டுகள் ஏற்படுத்தப்பட்டன. இதற்காக கட்டில்கள், மெத்தைகள் உட்பட ஏராளமான பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டன. அதன் பிறகு அந்த பொருட்கள் சரியாக பயன்படுத்தப்படாத நிலையில், 2 ஆண்டுகளுக்கு மேலாக பள்ளிகளில் தேங்கியுள்ளன. இதுகுறித்து மாநகராட்சி பள்ளி ஆசிரியர்கள் கூறும்போது, நல்ல நிலையில் உள்ள பொருட்களை உடனடியாக திரும்பப் பெற்று அரசு மருத்துவமனைகளுக்கு கோண்டு சென்றிருக்கலாம் என்றனர். ஆனால், அவ்வப்போது இருப்பு எவ்வளவு உள்ளன என்று கணக்கு கேட்கப்படுகிறதே தவிர, அவற்றை எடுத்துச் செல்லவில்லை என்று தெரிவித்தனர். தற்போது திரும்ப பயன்படுத்த நினைத்தாலும், பயன்படுத்த முடியாத அளவிற்கு வீணாகியுள்ளதாகவும் அவர்கள் வேதனையுடன் கூறினர்.