'பிரபஞ்ச அழகி' - அசத்த இருக்கும் 'சூப்பர் அம்மாக்கள்' - அடுத்த ஆண்டு முதல்...
'பிரபஞ்ச அழகி' - அசத்த இருக்கும் 'சூப்பர் அம்மாக்கள்' - அடுத்த ஆண்டு முதல்...
பிரபஞ்ச அழகி போட்டியில் கலந்து கொள்ள 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.. திருமணம் செய்திருக்க கூடாது... குழந்தை பெற்றிருக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள இருந்து வந்தன. இந்நிலையில், இனி மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் திருமணமானவர்களும், அம்மாக்களும் கலந்து கொள்ளலாம் என்ற புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒரு பெண்ணின் தனிப்பட்ட முடிவு... தடைஅவரது வெற்றிக்கு யாக இருக்க கூடாது என்பதை கருதி இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருப்பதாக போட்டி நடத்தும் அமைப்பு தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த நடைமுறை அமலுக்கு வர உள்ளது. இப்படி பிரபஞ்ச அழகி போட்டியில் புதுவித புரட்சியை ஏற்படுத்தும் விதமாக செய்யப்பட்டிருக்கும் இந்த விதி மாற்றத்தை பலரும் வரவேற்று வருகின்றனர்.