சிம்ஸ் பூங்காவில் பூத்துக் குலுங்கும் பூக்கள் காண்போரை கவர்ந்து வருகின்றன. குன்னூரில் அமைந்துள்ள சிம்ஸ் பூங்காவில் நுற்றாண்டு பழமையான மரங்கள் மற்றும் தாவரங்கள் உள்ளன. குறிப்பாக, இமாலய பகுதிகளில் மட்டும் காணப்படும் ருத்ராட்சை மரங்கள் மற்றும் குரங்குகள் ஏறா மரங்கள் என பல்வேறு மரங்கள் உள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைகளில் கடல் மட்டத்திற்கு மேல் சுமார் 2500 அடி உயரத்தில் அடர்ந்த சோலைகாடுகளில் மட்டும் காணப்படும் ரோடோ டென்ட்ரான் ஹார்பேரியம் வகையான மலர்கள் தற்ப்போது பூக்கத்துவங்கியுள்ளன. இவை காண்போர் கண்களுக்கு விருந்தாக உள்ளது.